2025 மே 05, திங்கட்கிழமை

போக்குவரத்துக்கு இடையூறு

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்,ஏ.ஆர்.எம்.றிபாஸ்

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளமையால், பொதுமக்கள் இப்பாலத்தினூடாகப் பயணம் செய்வதில் அச்சமடைந்துள்ளதுடன், போக்குவரத்தில் இடையூறும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

கிண்ணியாவில், மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும்கூட, இப்பாலத்தின் நிர்மாண வேலைகளைச் செய்யாமல் இருப்பதாக, பொதுமக்கள் சாடுகின்றனர்.

சுமார் 10 வருடகாலமாக இடிந்துவிழும் நிலையில் காணப்பட்டதுடன், அதன் ஒரு பகுதி நேற்று (28) இடிந்துவிழுந்துள்ளதெனவும், பாலத்தின் ஏனைய பகுதிகளும் இடிந்துவிழும் அபாயத்திலேயே காணப்படுவதாகவும், பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X