Editorial / 2019 பெப்ரவரி 20 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்
போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கணவன், மனைவி உட்பட மூவர், நேற்று (19) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை - கந்தளாய் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், அக்போபுர சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் கடமையாற்றும் 32 வயது உத்தியோகத்தர் ஒருவரிமிருந்தும் அவரது 28 வயது மனைவியிமிருந்தும் கேரளாக் கஞ்சா கைப்பற்றப்பட்டதையடுத்து, அவ்விருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, அவர்களது வீட்டைச் சோதனையிட்ட போது, கணவரிடம் 2214 மில்லிக்கிராமும் மனைவியிடம் 1107 மில்லிக்கிராமும் கேரளாக் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக, கந்தளாய் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4ஆம் கட்டைப் பிரதேசத்தில், 76 மில்லிக்கிராம் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில், 45 வயதுக் குடும்பஸ்தர் ஒருவர், திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சந்தேகநபரை, மேலதிக விசாரணைக்காக, திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ. ஜெனோசன் தெரிவித்தார்.
40 minute ago
55 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
55 minute ago
58 minute ago