Editorial / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், ஏ.எம்.கீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ், எப்.முபாரக்
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவு மற்றும் உப்புவெளி பொலிஸ் பிரிவிலிருந்து, ஹெரோய்ன், கஞ்சா ஆகிய போதைப்பொருள்களை வைத்திருந்த பெண்ணொருவர் உட்பட இருவரை, திருகோணமலை பிராந்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார், நேற்று (08) மாலை கைதுசெய்துள்ளனர்.
கண்டி வீதியின் விளாங்குளம் - உப்புவெளி பகுதியில், 120 மில்லிக்கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த 46 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதையடுத்து, அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸொன்றின் நடத்துநர், 350 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சந்தேக நபர்கள் இருவரும், முறையே உப்புவெளி பொலிஸ், திருகோணமலை தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .