2025 மே 14, புதன்கிழமை

போலி நாணயத்தாளை வைத்திருந்தவர்களுக்கு விளக்கமறியல்

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவரை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் நீதமன்றம் உத்தரவிட்டது. 

நிலாவெளி, இறக்கக்கண்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவ்விருவரையும் குச்சவெளி பொலிஸாரால் இன்று (2)  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்ட போது, பதில் நீதவான் ஏ.எம். முஹீத், இந்த உத்தரவை வழங்கினார்.

ஆயிரம் ரூபாய் போலி நாணயம் தாள் ஒன்றை வைத்திருந்தமை,போலி நாணயத் தாள்களை பங்கிட்டமை மற்றும்  அவற்றைப் பெறுவதற்கு ஊக்குவித்தமை போன்ற குற்றங்களுக்காக இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

திருகோணமலை, கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர்கள்  கைது செய்யப்பட்டனரென, திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X