2025 மே 19, திங்கட்கிழமை

முச்சக்கரவண்டியை அரசுடமையாக்குமாறு உத்தரவு

Thipaan   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை, மூதூர் பகுதியில் முச்சக்கரவண்டியில் சட்டவிரோத சாராய போத்தல்களை கொண்டு சென்ற நபர் ஒருவர் தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காமையினால், குறித்த முச்சக்கரவண்டியை அரசுடைமையாக்குவதற்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், நேற்றுத் திங்கட்கிழமை (22) உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது இந்த முச்சக்கரவண்டி தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமானது. எனினும், அவர்களும் பிணை எடுப்பதற்கு முன்வராமையினாலையே இம்முச்சக்கர வண்டி அரசுடமையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X