Princiya Dixci / 2016 மே 04 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எப்.முபாரக்
திருகோணமலை, சலப்பையாறு பிரதேசத்தில் இரண்டு மாடுகளைத் திருடிய நபரொருவரை, எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் பெர்ணாண்டோ, நேற்று செவ்வாய்கிழமை (03) உத்தரவிட்டார்.
குச்சவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாறுப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், சலப்பையாறு பிரதேசத்தில் இரண்டு மாடுகளைக் காணவில்லையென செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையின் பொலிஸார் திங்கட்கிழமை (02) மாலை கைதுசெய்து நேற்று (03)திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை குச்சவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago