2025 மே 21, புதன்கிழமை

மோட்டார் குண்டு மீட்பு

Niroshini   / 2016 மே 21 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காட்டுப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை 81 மில்லிமீற்றர் ரக மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

சீனக்குடா பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வெசாக் கொண்டாட்டத்துக்கு வெசாக் கூடு தயாரிப்பதற்காக காட்டுக்கு சிறிய தடிகள் எடுப்பதற்காகச் சென்ற போது குண்டு ஒன்று நிலத்தின் மேல் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரமே இக் குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக் குண்டு சேதமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .