Princiya Dixci / 2015 டிசெம்பர் 10 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம்.புஹாரி
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டடைபறிச்சான் பிரதேசத்தில் மாடொன்றைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் பதில் நீதிவான் இல்லியாஸ் முபாரிஸ், இன்று வியாழக்கிழமை (10) உத்தரவிட்டார்.
மாடுகளை பராமரிப்பதற்கு மாதாந்த சம்பள அடிப்படையில் கூலிக்கு அமர்த்தப்பட்ட நபரே, தனது முதலாளியின் மாட்டைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர் மூதூர் கிழக்கு பள்ளிக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் 22 வயதான தந்தையெனவும் இவர் திருடிய மாட்டின் பெறுமதி 23,500 ரூபாய் என மாட்டின் உரிமையாளர், தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார் எனவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago