2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

மாடு மேய்க்க இடமில்லை

Gavitha   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா-மொறவௌ பிரதேசங்களில் மாடுகளை வளர்க்கும் மாட்டு பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரவை இன்றி பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் எனவே மேய்ச்சல் தரவைகளுக்கு இடம் ஒதுக்க தருமாறும் மட்டு பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாடு வளர்ப்பினை வாழ்வாதாரதமாக கொண்ட எமக்கு, மேயச்சல் தரவைக்கான இட ஒதுக்கீட்டினை மேற்கொள்வதற்கு அரசியல்வாதிகளும் உரிய அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிண்ணியா பிரதேசத்திலுள்ள மாடுகளை மொறவௌ பிரதேசத்துக்கு மேய்ச்சலுக்காக கொண்டு வருகின்றமையினால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அப்பிரச்சினைகளை தவிர்ப்பதற்கும் இந்த இடம் அவசியப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .