2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

யட்டிநுவர எதிர்க்கட்சி தலைவரின் குடும்பத்தினர் சடலங்களாக மீட்பு

Janu   / 2025 ஜூலை 29 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்  சம்பிகா விஜேரத்ன (53), அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் முருத்தலாவை கம்பியாடிய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இறந்த சம்பிகா விஜேரத்ன நீண்டகால அரசியல்வாதி. அவரது உடல் வீட்டின் ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது, அதே நேரத்தில் அவரது 16 வயது மகள் மற்றும் மனைவியின் உடல்கள் வீடு முழுவதும் சிதறிக்கிடந்தன என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் அவர்களின் இளம் மகள் உயிர் பிழைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மர்மமான மரணங்களுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .