Princiya Dixci / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
வவுனியா, உக்குளாங்குளம் பிரதேசத்தில் 14 வயது மாணவி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருகோணமலை கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், இன்று வெள்ளிக்கிழமை (26) கவனயீர்ப்பு போராட்டமொன்றினைச் செய்யவுள்ளதாக அவ்வமைப்பின் தலைவி திருமதி நாகேந்திரன் ஆஸா தெரிவித்தார்.
திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாசார மண்டபத்துக்கு முன்னால் காலை 10 மணி முதல் 12 மணி வரை இக்கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இதில் சகல அமைப்புக்களையும் அரசியல் கட்சிகளையும், மத குருமார்களையும், பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் கலந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026