Suganthini Ratnam / 2016 ஜனவரி 10 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, மூதூர் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம், எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அப்பிரதேச செயலாளரும் அபிவிருத்திக் குழுவின் செயலாளருமான வி.யூசுப் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது சுனாமி அனர்த்தத்தினால்; பாதிக்கப்பட்டு வீடுகளின்றியுள்ள 56 குடும்பங்களின் வீடில்லாப் பிரச்சினை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றத்தின்போது இந்திய வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் பிரச்சினை, மூதூர் வேதத்தீவிலுள்ள கைம்பெண்களின் பிரச்சினை, இறால்குழி மீள்குடியேற்றத் திட்டத்தில் விடுபட்ட மக்களின் பிரச்சினை, புதிய இறால்குழி வீதி, புதிய செட்டி வீதி, ஸாபி நகர் வீதி, கேணிக்காடு வீதி, பாலம் ஆகியவற்றின் புனரமைப்பு, மூதூர் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்று வருவதற்கும் திசையை அறிவதற்குமாக மூதூர் தக்வா நகர் பகுதியில் கடற்கரையில் வெளிச்சவீடு அமைத்தல், மூதூர் வேதநகர் பிரதான வீதி சுற்றுவட்டம் அமைக்கக் கோரல் ஆகியவை தொடர்பில்; கவனத்திற்கொள்ளுமாறு கடிதம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago