Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை நகர சபையை மாநகர சபையாகவும் மூதூர் பிரதேச சபையை நகர சபையாகவும் மாற்ற வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர்; ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் திணைக்களங்களுக்கிடையிலான நிதியொதுக்கீட்டுத் திட்டத்தின் மாகாண சபையின் வரவு -செலவுத்திட்ட அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை மாகாண சபையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதேசங்களை உள்ளடக்கி ஒரு தனியான பிரதேச சபையையும் தோப்பூர் பிரதேசத்துக்கான தனியான பிரதேச சபையையும் முதலமைச்சரின் கவனத்தினைக் கொண்டு ஏற்படுத்த வேண்டும்' என்றார்.
'மேலும், கிண்ணியாவில் அமைக்கப்பட்ட வரவேற்புத்தூணை பூரணப்படுத்துவதுடன், உள்ளூராட்சி மன்றங்களின் சேவையை வினைத்திறன் மிக்கதாக மாற்ற வேண்டும்.
தற்போது வீதிகளில் கட்டாக்காலியாகத் திரியும் மாடுகள் மற்றும் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதைக் கட்டுப்படுத்தும் திட்டத்தினை ஏற்படுத்த வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களின் முத்திரை வரியில் குழறுபடிகள் ஏற்படுவதாகவும் அதற்காக வேண்டி சிறந்த அமைப்பை ஏற்படுத்தி கிழக்கு மாகாண சபையால் முத்திரை வரிக்கான புதிய முத்திரை திட்டமொன்றை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.
35 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
40 minute ago
51 minute ago