Niroshini / 2016 ஜனவரி 19 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் சிறப்பான சித்திகளைப் பெற்று பல்கலைக் கழகங்கள், பல்கலைக்கழக கல்லூரி மற்றும் தேசியக் கல்வியல் கல்லூரி அனுமதிக்கான தகுதிகளைப் பெற்றுள்ளனர்.
இம் மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கல்லூரியில் இடம்பெற்றது.
இப் பாடசாலையில் தோற்றி உயிரியல் பிரிவில் 67 சதவீத மாணவர்களும் கணிதப் பிரிவில் 67சதவீத மாணவர்களும் வர்த்தகப் பரிவில் 80 சதவீத மாணவர்களும் கலைப் பிரிவில் 75 சதவீத மாணவர்களும் உயிரியல் தொழில் நுட்பப் பிரிவில் 82 சதவீத மாணவர்களும் பொருளியியல் தொழில் நுட்பவியில் 60 சதவீத மாணவர்களும் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இம்முறை முதன்முறையாக தொழில்நுட்பப் பிரிவில் கூடுதலான மாணவர்கள் பல்கலைக் கழகம், பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் தேசியக் கல்விக் கல்லூரிகளுக்கு செல்லவுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 02 ஆம், 03ஆம், 06ஆம், 08ஆம், 09 ஆம்,10ஆம், 11ஆம் இடங்களில் உயிரியல் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களும் 06 ஆம், 13ஆம், 18ஆம், 19ஆம், 20ஆம் இடங்களில் பொருளியியல் தொழில் நுட்பப்பிரிவு மாணவர்களும் பெற்றுள்ளதாகவும் தொழில்நுட்பப்பிரிவில் இருந்து 82 மாணவர்கள் அனுமதி பெற வாய்ப்புள்ளதாகவும் கல்லூரி அதிபர் ஏ.எச்.எம் நஸீர் தெரிவித்தார்.
7 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
26 minute ago