2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

முதிரை மரக்குற்றிகளை வைத்திருந்தவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, மஹதிவுல்வெவப் பகுதியில் 21,792 ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு, திருகோணமலை நீதமன்ற நீதவான் விஷ்வந்த பெர்ணான்டோ, நேற்று (08) உத்தரவிட்டார். 

அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

விகாரகமக் காட்டுப்பகுதியில் முதிரை மரங்களை வெட்டி விற்பனை செய்து வருவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த நபரது, வீட்டுக்குச் சென்று சோதனையிட்ட போது, முதிரை மரக்குற்றிகளைக் கைப்பற்றிய வனப்பரிபாலன திணைக்கள அதிகாரிகள், சந்தேகநபரையும் கைதுசெய்திருந்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X