Princiya Dixci / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் மூன்று முதிரை மரங்கள் மறைத்து வைத்திருந்த இருவரை, இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவன் திஸாநாயக்க, நேற்று திங்கட்கிழமை (04) உத்தரவிட்டார்.
கந்தளாய், வட்டுக்கச்சி பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 43 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும், காட்டிலுள்ள முதிரை மரங்களை வெட்டி தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்காக வேண்டி மறைத்து வைத்திருந்த நிலையிலே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களை, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் கந்தளாய் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago