2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

மூதூரில் விபத்து: மூன்றாவது இளைஞனும் பலி

Thipaan   / 2016 ஜூன் 29 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

மூதூர் பிரதேசத்தில், தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது இளைஞனும், செவ்வாய்க்கிழமை(28) உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில், இறாக்குழி பாலத்துக்கருகே கடந்த  ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி சுமார் 7.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

இதில், முச்சக்கரவண்டியின் சாரதியான குப்பைத் தம்பி சப்ரி (வயது 23 ) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்திருந்தார்.

ஏனைய இருவரும் படுகாயமடைந்த நிலையில், மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, இரண்டாவது நபரான கலீல் றம்சான் (வயது23) என்பவர் அன்றைய தினமே உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில்  காயமடைந்தவரான மூன்றாவது இளைஞரான பாரூக் ஹம்ஸா இபாம் (வயது 22), திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைகள் பலனின்றி உயிழந்துள்ளதாக மூதூர் பொலிசார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X