Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜனவரி 09 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் முதலாம் தரத்துக்கு சேர்த்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஆசிரியர் இல்லை என்று கூறிப் பெற்றோர், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு மகஜரை இன்று (09) அனுப்பியுள்ளனர்.
அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வருடம் மேற்படி வித்தியாலயத்தில் முதலாம் தரத்துக்கு சேர்க்கும் மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு ஆசிரியர் இல்லை. மீன்பிடி மற்றும் விவசாயத்தை நம்பி வாழ்ந்துவரும் எங்களுக்கு பணம் கொடுத்து ஆசிரியர்கள் நியமிக்க முடியாத நிலைமை உள்ளது.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சருக்கும் கல்வித் தினைக்கள உயரதிகாரிகளுக்கும் பல தடவைகள் இப்பாடசாலையின் குறைபாடுகள், ஆசிரியர் பற்றாக்குறை பற்றித் தெரியப்படுத்தியிருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago