Princiya Dixci / 2017 மார்ச் 11 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, தோப்பூர் பிரதேச உள்ளைக் குளத்தில் நீராடிக் கொண்டிருந்த 14 வயதுடை சிறுமியை, முதலை இழுத்துச் சென்ற நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (11) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், தோப்பூர் அல்- கிதா வித்தியாலயத்தில் தரம் 08 இல் கல்வி பயிலும் முகம்மது- நிஸ்பரா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
தனது மைத்தினியுடன் குளித்துக் கொண்டு வெளியேறும் வேளை, சிறுமியின் காலில் முதலை கவ்விக் கொண்டதையடுத்து, மைத்தினி போராடியும், சிறுமியை, முதலை, குளத்துக்குள் இழுத்துச் சென்றுள்ளது.
பின்னர் ஊரார் இணைந்து, குளத்தில் நடத்திய தேடுதலில் குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம், தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025