2026 மார்ச் 23, திங்கட்கிழமை

மின்கலம் வெடித்துச் சிதறியதில் பெண் படுகாயம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலை, தோப்பூர் உதவிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அல்லைநகர் கிராமத்திலுள்ள வீட்டு வளவொன்றில் காணப்பட்ட குப்பைகளுக்கு தீ மூட்டியபோது, அக்குப்பையுடன் காணப்பட்ட தொலைபேசி மின்கலமொன்று (பற்றரி) வெடித்துச் சிதறியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அல்லைநகர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ஆர்.பஸீரா (வயது 31) என்பவரே ஞாயிற்றுக்கிழமை (31) மாலை இந்த அசம்பாவிதத்துக்கு உள்ளாகியுள்ளார்.  

உடனடியாக தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .