2025 ஜூலை 26, சனிக்கிழமை

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Thipaan   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 8 ஆம் கட்டைப் பகுதியில் மின்சாரம் தாக்கி, ஒருவர் உயிரிழந்துள்ளார் என, புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதியிலுள்ள ரஜமகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்குக் கட்டப்பட்டிருந்த கொடியினை கழட்டிக் கொண்டிருந்த போது, பக்கத்திலிருந்த மின்கம்பத்தில் கொடி பட்டதனால் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (24) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், விக்கிரமசிங்க (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X