2026 மார்ச் 23, திங்கட்கிழமை

மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்,அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்துக்கு அருகில் தலையில் காயங்களுடன் கரையொதுங்கிய சடலமொன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலங்கேணி கிராமத்தைச் சேர்ந்த 05 பிள்ளைகளின் தந்தையான ஏகாம்பரம் அன்புச்செல்வன் (வயது 48)  என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிண்ணியா, கொட்டியாரக்குடா ஆற்றில் மீன்பிடிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (25) தனது நண்பர்கள் இருவருடன் சென்ற இவர், ஆற்றில் வலையை வீசி விட்டுச் சென்றுள்ளார். பின்னர், அவ்வலையில் மீன்கள் அகப்பட்டுள்ளதா எனப் பார்வையிடச் சென்றபோது, இவர் காணாமல் போயுள்ளார்.  

பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் இவரைத் தேடும் நடவடிக்கை  சனிக்கிழமை (26) முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இவரது சடலம் கரையொதுங்கியதாகவும் பொலிஸார் கூறினர்.

ஏனைய இருவரிடமும் விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .