2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மகாவலி கங்கை நீரை பொலன்னறுவைக்கு திசை திருப்புவதை இடைநிறுத்துமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 05 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை மாவட்டத்தின் மாவிலாறு, மினிப்பே பகுதியில் உயரமான அணைக்கட்டு அமைக்கப்பட்டு மகாவலி கங்கை நீரை பொலன்னறுவை மாவட்டத்துக்கு திசை திருப்புவதற்காக முன்னெடுக்கப்படும் ஏற்பாட்டை இடைநிறுத்துமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மூதூர், வெருகல், சேருநுவர, தோப்பூர் ஆகிய பிரதேசங்களின் 42 விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த  விவசாயிகள் சேருநுவரப் பிரதேச செயலகத்துக்கு  முன்பாக இன்று புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், மகஜரையும் கையளித்தனர்.  

இதன்போது விவசாயிகள் தெரிவிக்கையில், 'இவ்வாறு அணைக்கட்டு அமைக்கப்பட்டு  பொலன்னறுவை மாவட்டத்துக்கு நீர் திசை திருப்பப்படுமாயின், தங்களின் பிரதேசங்களில்; வேளாண்மைக்கு போதுமான தண்ணீர் கிடைக்காது என்பதுடன், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும்' என்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X