Gavitha / 2016 மார்ச் 28 , மு.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மொறவௌ பகுதியில் 13 வயதுடைய சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய நபரை, எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) உத்தரவிட்டார்.
மொறவௌ, கம்பங்கோட்ட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், இரண்டாவது தடவை திருமணம் முடித்த மனைவியின் மகளை வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளதாக, இரண்டாவது மனைவியினால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சனிக்கிழமை (26) பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சம்பவம் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago