Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
மக்களின் பிரச்சினைகளின் கேட்டறிந்து, திணைக்களம் சார் அரச சேவைகளை தெளிவுபடுத்தி, மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஆலோசனை வழங்கும் "மக்கள் மன்றம்" எனும் நிகழ்வு, மூதூர் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (23) நடைபெற்றது.
“பங்குபற்றலுடனும், பொறுப்பேற்றலுடனுமான உள்ளூர் ஆளுகைகளை மேம்படுத்தல்” எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வை, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த சமூக மட்ட பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்ததோடு, தங்களது கிராமம் சார்ந்த பிரச்சினைகளை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி, அதற்கான தீர்வுகளையும் கேட்டறிந்து கொண்டனர்.
மூதூர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் அல் அமீன், மூதூர் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
37 minute ago
47 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
47 minute ago
1 hours ago
3 hours ago