Editorial / 2019 ஜனவரி 30 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
திருகோணமலை - நிலாவெளி பிரதான வீதி, அலஸ்தோட்ட பகுதியில், மசாஜ் நிலையங்களுக்கு எதிராக, பொதுமக்கள், இன்று (30) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவிலான மசாஜ் நிலையங்கள் காணப்படுவதாகவும் அதனால் சமூகச் சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாகவும் இந்த மசாஜ் நிலையங்களை உடனடியாக மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அம்மக்கள் வலியுறுத்தினர்.
அலஸ்தோட்டம் அபிவிருத்தி மகளிர் சங்கம், ஸ்ரீ நாகம்மாள் ஆலய நிர்வாக சபை, ஸ்ரீ நாகம்மாள் ஆலய அறநெறிப் பாடசாலை, அலஸ்தோட்டம் இளைஞர் அணி ஆகியோர்கள் இணைந்து, இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
“மசாஜ் நிலையங்களில் மூடு”, “சமூகச் சீர்கேடுகளை இல்லாமல் ஒழி” போன்ற பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.


3 minute ago
31 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
31 minute ago
54 minute ago
2 hours ago