2025 ஒக்டோபர் 23, வியாழக்கிழமை

‘மெண்டி’யுடன் ஒருவர் கைது

Janu   / 2025 ஒக்டோபர் 23 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பிரதான தபால் நிலையத்தில்,மெண்டி என்ற போதைப்பொருள் அடங்கிய 02 வெளிநாட்டு பொதிகளை, திருகோணமலை சுங்க அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (22) கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரொருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த இரண்டு பொதிகளும் பெல்ஜியம் நாட்டிலிருந்து அஞ்சல் பொதி மூலம் திருகோணமலை பிரதான தபால் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

துபாயில் உள்ள மூதூர்,ஜாயா நகரைச் சேர்ந்த நௌசாத் என்பவர் இவ் இரண்டு பொதிகளையும் தபால் நிலையத்திலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு சந்தேக நபருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பொதிகளை பெற்றுக்கொள்ள 26 வயதுடைய சந்தேக நபர்   தபால் அலுவலகத்துக்கு வருகை தந்த போதே துறைமுக பொலிஸ் நிலைய பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

 எஸ்.கீதபொன்கலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X