Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 01 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ், எம் எஸ் அப்துல் ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ், தீஷான் அஹமட்
மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துமாறும் வீதியைப் புனரமைப்புச் செய்து தருமாறும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கிண்ணியா பிரதேச செயலகப் பணியாளர்களை உள்நுழைய விடாது, வாசல்கதவை அடைத்த விவசாயிகள், கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் இன்று (01) ஈடுபட்டனர்.
இக்கவனயீர்ப்பில் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள கிண்ணியா, திணேரி, குரங்குப் பாய்ஞ்சான், சின்னவெளி, பெரிய வெளி, பட்டியானூர் உட்பட 15 விவசாயச் சம்மேளன உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
கிண்ணியா பிரதேசத்தில் மணல் அகழ்வாலும் மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களாலும் பாதிக்கப்படும் வீதிகள், போக்குவரத்து தொடர்பாக பிரதேசவாசிகள் , அதிகாரிகளிடம் பல தடவைகள் எடுத்துக் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென, கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
“விவாயிகளுக்கு அழிவை ஏற்படுத்தும் மணல் அகழ்வை நிறுத்தவும்”, “திருகோணமலை மாவட்ட புவிச்சரிதவியல் அதிகாரியே வெளியேறு”, ஊழல் செய்யும் பிரதேச செயலாளரை உடன் இடமாற்றம் செய்ய வேண்டும்”, “கிண்ணியாவின் இயற்கை வளத்தை வெளியாருக்கு விற்காதே” என எழுதப்பட்ட சுலோகங்களை விவசாயிகள் இதன்போது ஏந்தியிருந்தனர்.
இது தொடர்பாக கிண்ணியா பிரதேச செயலாளரிடம் கலந்துரையாடி, மகஜரொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
53 minute ago
2 hours ago
2 hours ago