Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2018 மார்ச் 21 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார்
மகாவலியை மையப்படுத்திய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்துமாறு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் பொலிஸாரிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
உரிய அதிகாரிகளால் திருட்டுத்தனமாக வழங்கப்படுகின்ற மண் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை உடன் நிறுத்துமாறும் பொலிஸார், பிரதேச செயலாளர்கள் கூடிய கவனம் எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பக்குமார தலைமையில் நேற்று (20) பிற்பகல் நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு கோரினார்.
மேலும், “முறையற்ற மண் அகழ்வினால் கடந்த மூன்று கருட காலமாக மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளது. அத்துடன், மண் அகழ்வினால் பல அனர்த்தங்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
“ஒரு நாளைக்கு 800க்கும் 1,000க்கும் அதிகமான மணல் டிப்பர்களில் 500 லோட் மணல் எடுத்து செல்லப்படுகிறது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago