2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் ஒருவரை, இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எல்.எச் விஸ்வானந்த பெர்ணாண்டோ, நேற்றுத் திங்கட்கிழமை (15) உத்தரவிட்டார்.

நிலாவெளி, இக்பால்நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்தநபர், மதுபோதையில், தலைக்கவசம் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய போது, ஞாயிற்றுக்கிழமை (14) மாலை கைது செய்ததாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

அந்நபரை, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில், ஆஜர்படுத்திய போதே நீதவான், மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .