2025 மே 23, வெள்ளிக்கிழமை

மதுபோதையில் மனைவியைத் தாக்கியவர் மீது தாக்குதல்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, கல்கடவெலப் பகுதியில் மதுபோதையில் மனைவியைத் தாக்கிய கணவரை, மனைவியின் உறவினர் ஒருவர் பொல்லால் அடித்துத் தாக்கியமையால், இரண்டு கால்கள்  உடைந்தும் தலையில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையிலும் அந்நபர், நேற்று திங்கட்கிழமை (18) இரவு கோமரங்கடவெலப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயங்களுக்குல்ளானவர், கோமரங்கடவெல -கல்கடவெலப் பகுதியைச் சேர்ந்த டி.சமந்த (வயது 38) எனவும் பொலிஸார் தெரிவித்தனர் 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் மனைவியின் உறவினர் ஒருவர் வருகை தந்து மதுபோதையில் வீழ்ந்து கிடந்தவரைப் பொல்லால் தாக்கி இரு கால்களையும் தலையையும் உடைத்து விட்டு தலைமறைவாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான நபரை, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் அவரின் இரண்டு கால்களும் உடைந்து காணப்படுவதாகவும் தலையில் காயம் ஏற்பட்டதினால் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் விபத்து சேவை பிரிவின் கடமை நேர வைத்தியர் தெரிவித்தார்.

தாக்குதலை மேற்கொண்ட நபரைக் கைதுசெய்யும் நடவடிக்கையில் கோமரங்கடவெலப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X