2025 ஜூலை 28, திங்கட்கிழமை

மதுபானம் வைத்திருந்தவருக்கு அபராதம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

சட்டவிரோதமான 2 சாராய போத்தல்கள் 3 பியர் போத்தல்களையும் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யபட்ட, திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லை நகர் பகுதியைச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவருக்கு, 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து நீதிவான் ஐ.என்.றிஸ்வான், நேற்றுத் திங்கட்கிழமை (22) உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த நபர், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், இவரின் வீட்டினை சோதனைக்குட்படுத்திய போதே, மதுபானப் போத்தல்களைப் பொலிஸார் கைப்பற்றினர்.

இவர் இதற்கு முன்னரும் சட்டவிரோதமாக, மதுபானப் போத்தல்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றில் குற்றவாளியாக இணங்காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .