2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மதுபான விற்பனை; ஒருவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை, நேற்றிரவு (04) கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், பன்குளம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்ற கட்டத்தில் மதுபான போத்தல்களை வீட்டில் மறைத்து வைத்திருந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், 09 மதுபான போத்தல்களை கைப்பற்றி, மேற்படி நபரைக் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .