2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மனைவியை தாக்கிய இராணுவ வீரருக்கு பிணை

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 03 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, மஹதிவுல்வௌ பகுதியில் மனைவியை பொல்லால் தாக்கிய இராணுவ வீரரை (வயது 35) ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்லுமாறு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க நேற்று (02) உத்தரவிட்டார்.

இவர் விடுமுறையில் வீட்டுக்கு வந்து மதுபானம் அருந்திவிட்டு, மனைவியுடன் சண்டை இட்ட நிலையில் அவரைப்  பொல்லால் தாக்கியுள்ளார்.

கணவரின் தாக்குதலுக்குள்ளான இவர் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மஹதிவுல்வௌ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமல பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனையடுத்து இவரது கணவரான இராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X