Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
பதின்மூன்று சிம் அட்டைகளைப் பயன்படுத்தியமைக்காக மனைவியை கணவன் தாக்கிய சம்பவம் திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (21) இரவு இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த 26 வயதுடைய மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மூன்று வருடங்களாக மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் செய்துவந்த கணவன், ஒரு மாதத்துக்கு முன்னர் இலங்கைக்குத் திரும்பியுள்ளார்.
வீட்டில் 13 சிம் அட்டைகள் காணப்பட்டமையைக் கண்டு கோபமடைந்த 28 வயதான கணவன் மனைவியைத் தாக்கியதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026