Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2017 ஜனவரி 22 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சசிக்குமார்
ஜனாதிபதி சாரணர் விருதுக்கான செயற்றிட்டம் திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது. ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி (60ஆவது திருமலை சாரணர் குழு) மாணவி செல்வி இரட்ணஜோதி எலோஜினி தனது உயர் விருதினைப் பெற்றுக் கொள்வதற்காக, மரநடுகையை, இன்று (22) ஆரம்பித்து வைத்தார்.
சனசமுக நிலையத்தின் அனுசரணையுடன் மாயைவெளி குளத்துக்கு அருகாமையில், நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் இத்திட்டத்தின் முதல் கன்றினை நட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் க.சுதாகரன், முந்நாள் நகராட்சி மன்ற தலைவர் க.செல்வராசா. கிராம சேவை உத்தியோகத்தர் ஆ.மகேஸ்வர். சசமுக உத்தியோகத்தர் க.முரளிதரன், மாவட்ட சாரணர் ஆணையாளர் க.உமாதிசிவம், உதவி மாவட் சாரணர் ஆணையாளர் சி.சசிகுமார், இ.சத்தியராஜ், மாவட்ட சாரணர் தலைவர் க.பகீரதன் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியரகள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago