Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூன் 09 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதிக்குள் தேன் எடுக்கச்சென்ற குடும்பஸ்தரொருவர், மரத்திலிருந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு உடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஒரு பிள்ளையின் தந்தையான கட்டைப்பறிச்சான் சந்தனவெட்டக்கல் பகுதியைச்சேர்ந்த கே.சுதாகரன் (22 வயது) என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.
தேன் எடுப்பதாற்காக, நேற்றுப் புதன்கிழமை (08) காட்டுக்குள் சென்று மரங்களை சோதனையிட்ட வேளையிலேயே, தவறுதலாக விழுந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
மரத்திலிருந்து விழுந்த நபரின் இடுப்புப் பகுதியில் எலும்பு முறிந்துள்ளமை எக்ஸ்ரே மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago