2025 மே 06, செவ்வாய்க்கிழமை

‘மலரும் கிழக்கு’: திருகோணமலையில் மாபெரும் கண்காட்சி

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக், வடமலை ராஜ்குமார்

கிழக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தில் ஏற்பாட்டில், "மலரும் கிழக்கு - கைத்தொழில் புரட்சி - 2018" எனும் மாபெரும் கண்காட்சி, திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சி, “கிழக்கிலங்கையின் கைத்தொழிற்றுறையின் புதியதொரு யுகம்” என்ற நோக்கை அடையாளமாகக் கொண்டு, திருகோணமலை, செல்வநாயகபுரத்தில் அமைந்துள்ள கிராமியத் தொழிற்றுறை அலுவலக வளாகத்தில், எதிர்வரும் 20, 21, 22ஆம் திகதிகளில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.

கிராமிய கைத்தொழிற்றுறையின் கைப்பணிப் பொருட்கள், கைத்தொழில் நுட்பங்கள் உள்ளடங்கலாக பல்வேறுபட்ட காட்சிக் கூடங்களை இக்கண்காட்சியின் போது கண்டு பயன்பெறலாம்.

இதன் ஆரம்ப வைபவம், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவால், எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும், இந்த ஆரம்ப நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹரூப், எம்.எஸ்.தௌபீக், சுசந்த புஞ்சிநிலமே, க.துரைரட்ண சிங்கம், இம்ரான் மஹரூப் மற்றும் கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாச கலபதி, பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபயகுணவர்தன, திருகோணமலை மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார, கிழக்கு மாகாண உள்ளூராட்சி மற்றும் கிராமிய தொழிற் துறை அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் உட்படப் பலரும் பங்கேற்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X