2025 மே 14, புதன்கிழமை

மஹிந்த அணி கட்டுப்பணம் செலுத்தியது

Editorial   / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தை, முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவினர், நேற்று செலுத்தினர்.

கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மற்றும் கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகர்கள், திருகோணமலை மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் கட்டுப்பணத்தைச் செலுத்தினர்.

தாமரை மொட்டுச் சின்னத்தில் மஹந்த அணியினர் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X