Editorial / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று (27) உத்தரவிட்டார்.
கிண்ணியா - மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள தி/ இக்ரா வித்தியாலத்துக்கு முன்னால், சைக்கிளில் நேற்று முன்தினம் (26) பாடசாலை விடுகின்ற நேரத்தில் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்த சமயத்தில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
இவர் கிண்ணியா , ரியாத் நகரைச் சேர்ந்த 32 வயதான குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவரிடமிருந்து, மூன்று வகையான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும் குறித்த நபர் ஏற்கெனவே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதற்காக நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
6 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
34 minute ago
1 hours ago