2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

மாணிக்கக்கல் வியாபாரி மீது தாக்குதல்; நால்வருக்கு விளக்கமறியல்

Editorial   / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நால்வரை, நாளை 16) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் சமிலாகுமாரி ரத்நாயக்கா, நேற்று (14) உத்தரவிட்டார்.

குருவிட்ட, அவிசாவளை, தெனியாயப் பகுதிகளைச் சேர்ந்த 58, 30, 36, மற்றும் 40 வயதுடைய நால்வரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள், மாணிக்கக்கற்கள் வியாபாரம் செய்யும் நபரிடம் மாணிக்கக்கற்கள் வாங்கச் சென்ற நிலையிலே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நால்வரும் இணைந்து, வியாபாரி மீது தாக்குதல் நடத்தியதாகப் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய, அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை, திருகோணமலை நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, மேற்படி சந்தேகநபர்கள் பயன்படுத்திய அதி உயர் ரகப் பெறுமதியான காரொன்று, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த உப்புவெளிப் பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X