2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மான் இறைச்சியை வைத்திருந்தவருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம்

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2 கிலோகிராம் மான் இறைச்சியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்,  கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு, இன்று (11) திருகோணமலை  மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார்.

குறித்த நபர் ரொட்டவெவ, எத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த கசும் பிரசன்ன பத்மலால் (30 வயது) எனப் பொலஸார் தெரிவித்தனர்.

திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, குறித்த இடத்திற்கு  விரைந்த பொலிஸார் , அங்கு மோட்டார் சைக்கிளில் இறைச்சியை கொண்டு வரும் போது சந்தேக நபர்களை கைது செய்ததாக தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் (11) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, இவருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X