Mayu / 2024 ஜனவரி 17 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தில் 2023 நடைபெற்ற தொழில் பயிற்சி நிலையங்களுக்கான நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட மூதூர் மற்றும் கிண்ணியா பகுதிகளிலுள்ள செவிபுலன் குறைபாடு உடைய இரண்டு மாற்றுத்திறனாளிகள் கண்டியில் அமைந்துள்ள கட்டவெல தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (16) திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் வழிகாட்டுதலுக்கிணங்க திருகோணமலை மாவட்ட செயலக சமூக சேவைகள் பிரிவினால் நேரடியாக கொண்டு சென்று உட்சேர்க்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன், மாவட்ட செயலக அங்கவீனமுற்ற தேசிய செயலகத்தின் இணைப்பாளர் துவாரகன் மற்றும் பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அ . அச்சுதன்

3 minute ago
44 minute ago
44 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
44 minute ago
44 minute ago
54 minute ago