அப்துல்சலாம் யாசீம் / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - பம்மதவாச்சிப் பகுதியில், நேற்று (11) மாலை வீசிய மினி சூறாவளியால் 11 வீடுகள் சேதமடைந்துள்ளன.
அரசாங்கத்தால் மானிய அடிப்படையிலும் கடன்களைப் பெற்றும் வீடுகளை நிர்மாணித்து வந்துகொண்டிருந்த வேளையே, இந்த இயற்கை அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இது இன்னும் வறுமையின் பக்கம் தம்மை இழுத்துச் சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
நீண்ட நாள்களுக்குப் பின்னர் திருகோணமலை மாவட்டத்தில் மழை பெய்த போது தாம் சந்தோஷமாக இருந்ததாகவும் ஆனால், சூறாவளியால் வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளமை மிகவும் மன வேதனைத் தருவதாகவும் கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.
மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட குறித்த 11 வீடுகளையும் புனரமைப்பதற்கு அரசாங்கமும் அரசியல்வாதிகளும் உடனடியாக கவனமெடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
33 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago
1 hours ago