2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மின்சார வேலியில் சிக்குண்டு விவசாயி பலி

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜனவரி 28 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை –அத்தாபெந்திவெவ, பெனிக்கிட்டியாவ வயல் பகுதியில் விவசாயியொருவரின்  சடலமொன்று இன்று (28) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம், ரொட்டவெவ.அத்தாபெந்திவெவ பகுதியைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அவ்சதஹாமிகே சுகத் பிரதீப் குமார (45வயது) என பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெனிக்கிட்டியாவ வயலுக்கு நேற்று(27) இரவு காவலுக்காக சென்றப் போது, வயலை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள யானை மின் வேலியில்சிக்குண்டு, உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் சம்பவ இடத்தில் காணப்படுவதுடன் சடலத்தை  நீதவான் பார்வையிட்ட பின்னர் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .