2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மின்னல் தாக்கி விவசாயி பலி

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்
 
திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நையந்தன் வயல் பகுதியில், விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவமொன்று நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளதென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். 
 
தனது வயலுக்கு வேலைக்குச் சென்றிருந்த போது, சம்பூரைச் சேர்ந்த செல்லத்துறை ராமமூர்த்தி (வயது 65) எனும் விவசாயியே, இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார். 
 
உயிரிழந்தவரின் சடலம், தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக, மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூருல்லா தெரிவித்தார்.
 
சம்பவம் தொடர்பில், சம்பூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X