Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 04 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, குச்சவெளி கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பகுதியில் பொது மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று புதன்கிழமை (04) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குச்சவெளி கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை (03) மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இதன்போது குச்சவெளி ஜாயா நகரைச் சேர்ந்த 23 வயதுடைய மீனவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுபோன்ற மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது “பாமர மக்கள் மீது கடுமையான சட்டத்தை திணிக்காதே", "தீவிரவாதிகள் இல்லை நாம் மீனவ தொழிலாளர்" “அடிக்காதே அடிக்காதே மீனவர் வயிற்றில் அடிக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏ.எச். ஹஸ்பர்
38 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
52 minute ago
2 hours ago