2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மீன் பிடித்துச் சென்றவரை தாக்கியது யானை

Freelancer   / 2022 ஒக்டோபர் 17 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கநகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இன்று அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சேருநுவர - தங்கநகர் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான குணசேகரம் இராசநாயகம் ( வயது 48) என்பவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் குளமொன்றுக்குச் சென்று மீன் பிடித்துவிட்டு வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும்போது இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.   (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .