2025 மே 08, வியாழக்கிழமை

மு.காவின் மூத்த போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைவு

எப். முபாரக்   / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளிகள் சுமார் 20 பேர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.

மூதூர் பிரதேச சபைத் தேர்தலில், நெய்தல் நகர் வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மூதூரில் சனிக்கிழமையன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே, இவர்கள் இவ்வாறு இணைந்துகொண்டனர்.

மூதூர் மக்களின் விடிவுக்காக, எந்த விதமான நடவடிக்கைகளையும் இத்தனை வருட காலமும் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளாத நிலையிலேயே,  தாம் இந்த முடிவை எடுத்ததாக, அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலாக மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திகழ்வதாலும் தாம், மக்கள் காங்கிரஸுடன் கை​ கோர்த்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X