2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முச்சக்கரவண்டி விபத்து ; ஒருவர் உயிரிழப்பு

Janu   / 2023 செப்டெம்பர் 03 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெருகல் - பூநகர் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்துச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வெருகல் முருகன் ஆலயத்திற்கு சவாரி ஒன்றை ஏற்றிச் சென்று வீடு திரும்புகையில் நித்திரைத் தூக்கம் காரணமாக முச்சக்கரவண்டி பூநகர் பகுதியில் மரம் ஒன்றில் மோதியுள்ளது. இதன்போது முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சாரதி தியாகராசா ஜெயச்சந்திரன் (வயது 41) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சஞ்ஜீவன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X